தஞ்சை மாவட்டத்தில் 20.43 லட்சம் வாக்காளர்கள்
தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 20 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளன. ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
தஞ்சாவூர்;
தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டார். அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 20 லட்சத்து 43 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளன. ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 2023-ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலின் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று வெளியிட்டார்.பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவதுதஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 844 பேரும், பெண் வாக்காளர்கள் 10 லட்சத்து 49 ஆயிரத்து 103 பேரும், இதர பாலினத்தவர்கள் 169 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 43 ஆயிரத்து 116 வாக்காளர்கள் உள்ளனர்.
76 ஆயிரத்து 328 விண்ணப்பங்கள்
சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளில் கடந்த 9-11-2022 முதல் 8-12-2022 வரை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கோரி வந்த 34 ஆயிரத்து 390 படிவங்களில் 33 ஆயிரத்து 351 படிவங்கள் ஏற்கப்பட்டன. பெயர் நீக்கக்கோரி 23 ஆயிரத்து 920 படிவங்கள் வெறப்பட்டத்தில் 23 ஆயிரத்து 389 ஏற்கப்பட்டது. திருத்தங்களுக்காக வரப்பெற்ற 18 ஆயிரத்து 14 படிவங்களில் 17 ஆயிரத்து 511 ஏற்கப்பட்டது. ஆக மொத்தம் வரப்பெற்ற 76 ஆயிரத்து 328 படிவங்களில் 74 ஆயிரத்து 251 ஏற்கப்பட்டுள்ளது.மேலும் 18 வயது நிறைவடைந்த இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ஆதார் எண் இணைக்கும் பணியினை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முடிப்பதற்கும், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் புகைப்படம் தெளிவாக இடம்பெறுவதற்கு வாக்காளர்களின் புகைப்படத்தை பெறுவதற்காக வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு வரும்போது உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வருகிற 25-ந்தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால் மாவட்ட தலைமையிடம், வட்ட தலைமையிடங்கள், வாக்குச்சாவடிமையங்களிலும் கொண்டாடப்படுகிறது.
வாக்காளர் அடையாள அட்டை
வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் அனைத்து மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் வாக்காளர்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. வருகிற ஜனவரி 26-ந் தேதி நடைபெற உள்ள கிராம சபா கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள வாக்காளரின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா? தேர்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கலாம்
மேலும் இந்த வருடம் முழுவதும் நடைபெற உள்ள தொடர் திருத்தப்பணியில் 18-வயது பூர்த்தியடைய உள்ளவர்கள் அடுத்துவரும் நான்கு காலாண்டுகளின் மையத்தகுதிநாளில் மற்றும் அக்டோபர் 1 ஆகிய அதாவது ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1 காலாண்டின் தகுதிநாளில் முன்கூட்டியே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, தேர்தல் தாசில்தார் ராமலிங்கம், புண்ணியமூர்த்தி, எல்.ஜி.அண்ணா (தி.மு.க.), சரவணன் (அ.தி.மு.க.), ஜெய்சதீஷ், முரளிதரன் (பா.ஜ.க.,), மோகன்ராஜ், பழனியப்பன் (காங்கிரஸ்), செந்தில்குமார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), லக்கிசெந்தில், அடைக்கலம் (தே.மு.தி.க.) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.