விருத்தபுரீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம்
விருத்தபுரீஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை
அன்னவாசலில் பிரசித்தி பெற்ற தர்மசம்வர்த்தினி சமேத விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிய தேர் செய்யப்பட்டது. இதன் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தேரோட்டத்தை அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தேரை கோவிலை சுற்றி இழுத்து வந்து கோவில் நிலையினை அடைந்தனர். இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமத்து கோவில் பூசாரிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story