வ.உ.சி. துறைமுகத்தில் மரைன் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்


வ.உ.சி. துறைமுகத்தில் மரைன் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மரைன் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் மரைன் பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலைநிறுத்த போராட்டம்

இந்தியாவில் உள்ள பெரிய துறைமுகங்களில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகமும் ஒன்று. இந்த துறைமுகத்தில் மரைன் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கப்பல்களை அதற்கு உண்டான தளத்திற்கு கொண்டு வருவதும், பின்னர் கப்பலை தளத்தில் இருந்து வெளியே எடுத்து விடும் பணியை செய்கின்றனர்.

இந்த நிலையில் மரைன் பிரிவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் குறைவாக வழங்கப்படுவதாகவும், மேலும் அதிகப்படியான பணி செய்வதற்கான ஊதியத்தை துறைமுக நிர்வாகம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நேற்று பகல் திடீரென்று மரைன் பிரிவு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணிகள் பாதிப்பு

இதனால் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 15-க்கு மேற்பட்ட கப்பல்களில் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


Next Story