வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு


வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
x

வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, நெல்லையில் உள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வ.உ.சி. நினைவு தினம் அனுசரிப்பு

சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை டவுன் பொருட்காட்சி திடல் வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

அரசு வக்கீல் கந்தசாமி, மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், நித்திய பாலையா, சுந்தர், முன்னாள் மேயர் புவனேசுவரி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெய அருள்பதி, மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் ஆறுமுகசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், உதயகுமார், கவிபாண்டியன் மற்றும் சண்முகவேல், பழவூர் ராமச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் சகுந்தலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளரும், வ.உ.சி. ரத்த தான கழக நிறுவனருமான சரவண பெருமாள் தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

மேலும் மணிமண்டபம் அருகில் தற்காலிக பஸ் நிலைய வளாகத்தில் கணேசன் நற்பணி மன்றம் தச்சை அருள்ராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தையும் சரவணபெருமாள் தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க.

பா.ஜ.க. சார்பில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் தயாசங்கர், முன்னாள் மாவட்ட தலைவர் மகாராஜன், பொதுச்செயலாளர்கள் வேல் ஆறுமுகம், சுரேஷ் மற்றும் முருகதாஸ், மாவட்ட செயலாளர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க.- ம.தி.மு.க.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஆவின் அண்ணாசாமி தலைமையிலும், தே.மு.தி.க சார்பில் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையிலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ம.தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம் ஆகியோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மருத்துவ அணி சுந்தரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மு.மு.க.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிர்வாகிகள் அய்யப்பன், சங்கர், முத்துவேல் ராஜா, செல்வகுமார், சின்னத்துரை, முத்து, ஓவியர் அணி பழனிவேல், இளைஞர்அணி முத்துவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சைவ வேளாளர் சங்கம் சார்பில் ஜெகதீசன், குரு உலகநாதன், காந்திமதிநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்து மக்கள் கட்சி சார்பில் தென் மண்டல தலைவர் ராஜா பாண்டியன், மாநில செயலாளர் முருகானந்தம், நெல்லை மாவட்ட தலைவர் துவரை மாரியப்பன் உள்ளிட்டோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


Next Story