தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி நெல்லியாளம் தேயிலை தொழிற்சாலையில் காத்திருப்பு போராட்டம்-பந்தலூர் அருகே பரபரப்பு
பந்தலூர் அருகே தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி நெல்லியாளம் தேயிலை தொழிற்சாலையில் காத்திருப்பு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பந்தலூர்
பந்தலூர் அருகே தற்காலிக தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி நெல்லியாளம் தேயிலை தொழிற்சாலையில் காத்திருப்பு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்காலிக தொழிலாளர்கள்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தொழிற்சாலையில் ஏராளமான கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தேயிலை தோட்டங்களில் பசுந்தேயிலை இலை உற்பத்தி குறைந்துள்ளது.
இதனால் தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை இலை வரத்து குறைந்துள்ளதால் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அதனால் தொழிற்சாலையில் பணியாற்றிய நிரந்தர தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனா். ஆனால் தற்காலிக தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காத்திருப்பு போராட்டம்
இதனால் அவர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த தற்காலிக தொழிலாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி தொழிற்சாலை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுபற்றி அறிந்ததும் சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா மற்றும் ேபாலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.