தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பார்வையாளர் காத்திருப்பு கூடம் திறப்பு


தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பார்வையாளர் காத்திருப்பு கூடம் திறப்பு
x

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சைமருத்துவக்கல்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பூட்டிக்கிடந்த பார்வையாளர் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சைமருத்துவக்கல்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பூட்டிக்கிடந்த பார்வையாளர் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டது.

பார்வையாளர் காத்திருப்பு கூடம்

தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு தஞ்சை மாவட்டம் மட்டும் அல்லாது அருகில் உள்ள புதுக்கோட்டை, திருவாரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இங்கு உள்நோயாளிகளாக ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் புற நோயாளிகளாகவும் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதனால் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகம் பரபரப்புடன் காணப்படும். இங்கு உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தங்க ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பார்வையாளர்கள் காத்திருப்பு கூடத்தில் தங்குவது வழக்கம்.

'தினத்தந்தி' செய்தி எதிரொலி

ஆனால் மருத்துவக்கல்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே உள்ள பார்வையாளர் காத்திருப்பு கூடம் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் நோயாளிகளின் உறவினர்கள் மரத்தடியிலும், இரவு நேரத்தில் ஆங்காங்கே சாலையேரத்திலும் தங்குவதை காண முடிந்தது.

மேலும் பார்வையாளர் காத்திருப்பு கூடத்தின் உள் பகுதி சுகாதாரமின்றி குப்பை நிறைந்து காணப்படுகிறது. இது தொடர்பாக 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பார்வையாளர் கூடம் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.

திறக்கப்பட்டது

அதன் பின்னர் பார்வையாளர் கூடம் மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் அங்கு அமர்ந்து சாப்பிட்டனர். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் உறவினர்களும் காத்திருப்பு கூடத்தில் தங்கினர். பார்வையாளர் கூடம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து பொதுமக்கள் 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த ஆஸ்பத்திரி நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தனர்.தினத்தந்தி செய்தி எதிரொலி காரணமாக தஞ்சைமருத்துவக்கல்கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் பூட்டிக்கிடந்த பார்வையாளர் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டது.


Next Story