தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்


தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்
x

வந்தவாசியில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் சார்பில் இலவச பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.

வட்டார செயலாளர்கள் ஆரிப், சுப்பிரமணி, நாராயணன், செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் தங்கராஜ், மாவட்ட நிர்வாக குழு முத்தையா, மாவட்ட தலைவர் மோகன்குமார், மாவட்ட செயலாளர் கள்ளக்குறிச்சி வெங்கடேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வந்தவாசி நகரத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை வழங்க கோரி கோஷமிட்டனர்.

இதில் ஒன்றிய மகளிர் அணி செண்பகவல்லி, சாந்தி, விஜயா, ஒன்றிய பொறுப்பாளர் ஆணைப்போகி ஆனந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அசோகன் நன்றி கூறினார்.


Next Story