நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விடுவிப்பு
2021-2022 காரீப், ராபி பருவங்களுக்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பழனி தொிவித்துள்ளாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் 20212022-ம் ஆண்டின் காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள 216 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சத்து 60 ஆயிரத்து 323 மற்றும் ராபி பருவத்தில் பயிர் காப்பீடு செய்யப்பட்டு நிலுவையில் உள்ள 2,506 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 1 லட்சத்து 92 ஆயிரத்து 528 தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20212022ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்திருந்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையாக கடந்த டிசம்பர் மாதம் 2021ல் காரீப் பருவத்திற்கு 2,915 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 38 லட்சத்து 14 ஆயிரத்து 727-ம், 2022 அக்டோபர் மாதத்தில் நெல் சம்பாவிற்கு 68,081 விவசாயிகளுக்கு ரூ.60 கோடியே 62 லட்சத்து 10 ஆயிரத்து 771-ம், டிசம்பர் மாதத்தில் ராபி இதர பயிர்களுக்கு 5,148 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 98 லட்சத்து 60 ஆயிரத்து 839-ம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.