வாகன நிறுத்தம் அமைக்க கோரிக்கை
வாகன நிறுத்தம் அமைக்க கோரிக்கை
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாத்துரை அளித்த மனுவில், 'பல்லடம் பஸ் நிலையம் மற்றும் தினசரி மார்க்கெட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகள் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு விடப்படாமல் இருப்பதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் தினசரி மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழைய கடைகளை இடித்து விட்டு மீண்டும் கடைகளை கட்டி வாடகைக்கு விடும் திட்டத்துக்கு தற்போது மண் பரிசோதனை செய்து கடைகள் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. ஏற்கனவே கடைகள் வாடகைக்கு விடப்படாமல் உள்ள நிலையில் மீண்டும் கடைகள் கட்டுவதால் வருவாய் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். அந்த இடத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
----