கச்சநத்தம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது
கச்சநத்தம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
மானாமதுரை,
கச்சநத்தம் கொலை வழக்கில் தேடப்பட்டவர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கொலை வழக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது கச்சநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கருப்பையா என்ற சுள்ளான் என்பவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
தலைமறைவாக இருந்த அவரை கைது செய்ய கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. கருப்பையாவை தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் வலைவீசி தேடி வந்தனர்.
கைது
இந்நிலையில் கருப்பையா சென்னையில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில், மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மேற்பர்வையில் மானாமதுரை சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கருப்பையாவை கைது செய்தனர்.
கச்சநத்தம் கொலை வழக்கில் கடந்த 5-ந் தேதி 27 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.