அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்
கோட்டூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்;
கோட்டூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடுநிலைப்பள்ளி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் ெரங்கநாதபுரம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இ்ங்கு 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.பழுதடைந்த ஒரு கட்டிடத்தில் ஒன்று முதல் ஆறு வகுப்புகள் வரை நடைபெறுவதால் போதிய இடவசதி இல்லாமல் மாணவர்கள் மிக நெருக்கமாக தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
நடவடிக்கை இல்லை
மேலும் ஆசிரியர்களும் தனித்தனியாக பாடம் நடத்த முடியவில்லை மற்றொரு கட்டிடத்தில் 7, 8-ம் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. கட்டிடங்கள் பழுதடைந்துள்ளது குறித்து அதிகாரிகளுக்கு முறைப்படி தகவல் தெரிவித்தும் இதுவரை புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
புதிய கட்டிடம்
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் ரெங்கநாதபுரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை நேரில் பார்வையிட்டு பள்ளிக்கு சகல வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.