பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
x

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம்

கும்பகோணத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் கோட்ட சங்கத்தலைவர் வெங்கடகிரி தலைமை தாங்கினார். மாநிலத்தலைவர் மணிவண்ணன், மாநில பொதுச்செயலாளர் முத்தையா, மாநில பொருளாளர் இந்திரஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோட்ட சங்க செயலாளர் பழனியாண்டி ஆண்டறிக்கை வாசித்தார்.மாநில ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க நிறுவனர்அய்யணன், ஊரக வளர்ச்சித்துறை, மேல்நிலை அலுவலர்கள் சங்க தலைவர் சின்னதுரை ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-அரசு ஓய்வூதியர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல் 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்து வழங்கிய தமிழக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பது, ஓய்வூதியர்களுக்கான பொது மருத்துவ காப்பீடு திட்டத்தை ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்களுக்கும் நடைமுறைப்படுத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளருக்கு கோரிக்கை விடுப்பது,

10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம்

70 வயது முடிவடைந்த ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கேட்பது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்திட வலியுறுத்துவது, ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ளாட்சி நிதி தணிக்கை இயக்குனரை கேட்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.


Next Story