மல்லமூப்பம்பட்டிஊராட்சி அலுவலகம் முன்புவார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்பணிகள் நடக்கவில்லை என புகார்
மல்லமூப்பம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினார். அவர் பணிகள் நடக்கவில்லை என புகார் தெரிவித்தார்.
இரும்பாலை,
சேலம் ஊராட்சி ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சியில் 11-வது வார்டு உறுப்பினர் மேகலா தன்னுடைய கணவர் கண்ணனுடன் நேற்று மதியம் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருவேரங்கன், அனுராதா மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள், வார்டு உறுப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சியில் கூட்டம் முறையாக நடத்தப்படவில்லை. 11-வது வார்டு பகுதியில் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை என வார்டு உறுப்பினர் புகார் கூறினார்.
வார்டு உறுப்பினர் புகார் குறித்து ஊராட்சி தலைவர் பேச்சியம்மாள் ஆறுமுகம், செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாரபட்சம் இல்லாமல் பணிகள் செய்யப்பட வேண்டும். கூட்டம் முறையாக நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர். சமரச பேச்சுவார்த்தையை தொடர்ந்து வார்டு உறுப்பினர் மேகலா, கண்ணன் ஆகியோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.