விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
சிவகாசி,
சிவகாசி அய்யநாடார்-ஜானகி அம்மாள் கல்லூரியின் உடற்கல்வியியல் துறை சார்பில் 3 நாள் விளையாட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடக்கிறது. இதில் உடற்கல்வித்துறையை சேர்ந்த 250 மாணவர்கள் சைக்கிளில் பேரணியாக சிவகாசியில் இருந்து தென்காசி சென்று பொதுமக்களிடம் உடற்பயிற்சி குறித்து விழிப்புணர்வு செய்ய உள்ளனர். இதன் தொடக்க விழா நேற்று காலை கல்லூரியில் நடைபெற்றது. முதல்வர் அசோக் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட மாணவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை முழுக்கமிட்டப்படி சைக்கிளில் தென்காசி நோக்கி சென்றனர். கல்லூரியில் இருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணி மல்லி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர், தேவதானம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர் வழியாக நேற்று இரவு இலஞ்சியை அடைந்தது. இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு தென்காசியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர். இந்த மாணவர்கள் 3 நாட்களில் 240 கி.மீ. தூரம் பயணம் செய்து விளையாட்டு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறார்கள். பேரணிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வியியல் துறை தலைவர்கள் சுரேஷ்பாபு, ஜான்சன், பேராசிரியர்கள் முருகன், அருண்சங்கர், மீனாட்சிசுந்தரம், சிவனாந்தபிரபு, வீரமணி, குருவபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.