பொங்குபாளையம் ஊராட்சியைகண்டித்து கண்டன கூட்டம்


பொங்குபாளையம் ஊராட்சியைகண்டித்து கண்டன கூட்டம்
x

பொங்குபாளையம் ஊராட்சியை கண்டித்து கண்டன கூட்டம்

திருப்பூர்

பெருமாநல்லூர்

பொங்குபாளையத்தில் ஊராட்சியை கண்டித்து ஊராட்சி அலுவலகம் முன்பு கண்டன கூட்டம் நடந்தது. முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்தும் வீடுகளில் கட்டிட அனுமதி, வீட்டு வரி போடாமல் உள்ளதைக்கண்டித்தும், ஊராட்சி சார்பாக கட்டிக் கொடுத்த பழைய வீடுகள் பழுதடைந்துள்ளதை சீர்படுத்தி தரக்கூறியும், ஊராட்சியில் உள்ள மின்கம்பங்கள் மற்றும் தார் சாலைகளை பழுது நீக்கி தரக்கோரியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் புகார் எழுப்ப வருபவர்களை தங்களைச் சார்ந்தவர்கள் மூலம் மிரட்டுவதாகவும் கூறி இந்த கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள், பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். பெருமாநல்லூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Related Tags :
Next Story