கிருஷ்ணகிரி அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு:தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கிருஷ்ணகிரி அணையில் உபரிநீர் திறக்க வாய்ப்பு:தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 May 2023 10:00 AM IST (Updated: 30 May 2023 10:05 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடியாகும். நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 48.25 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு வினாடிக்கு 456 கனஅடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் எந்த நேரமும் திறக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. எனவே பொதுமக்கள், ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம். கால்நடைகளை ஆற்றங்கரையோரம் கொண்டு செல்ல வேண்டாம். தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story