ரசாயன வேதிப்பொருட்கள் கலந்த ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதா?
ரசாயன வேதிப்பொருட்கள் கலந்த ஆலைக்கழிவுகள் கொட்டப்பட்டதா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள பெரிய ஏரியில் நேற்று முன்தினம் திடீரென்று பல நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இது தொடர்பாக நீர்வள ஆதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் கற்பகம் நேற்று நகராட்சி நிர்வாகத்தினருடன் சென்று பெரிய ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரிய ஏரியின் வெளிப்பகுதிகளில் இருந்து ரசாயன வேதிப்பொருட்கள் கலந்த ஆலைக்கழிவுகள் அல்லது கழிவுநீரை லாரி-வேன்களில் கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் துறைமங்கலம் பெரிய ஏரியில் கொட்டி சென்றிருக்கலாம் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டாக கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் நீர்வளஆதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story