பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 5 ஆடுகள் திருட்டு

பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 5 ஆடுகள் திருட்டு
x

பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை

ஆரணி

பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த 5 ஆடுகள் திருடப்பட்டுள்ளன.

ஆரணியை அடுத்த பூசி மலை குப்பம் கொட்டாய் மேடு பகுதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 56). விவசாயி. இவரது வீட்டின் முன்பு 6 ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவில் ் மர்ம நபர்கள் இவற்றில் 5 ஆடுகளை திருடி சென்று விட்டனர்.

இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் உலகநாதன் புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story