குப்பை சேகரிப்பவர் கல்லால் தாக்கி படுகொலை


குப்பை சேகரிப்பவர் கல்லால் தாக்கி படுகொலை
x

குப்பை சேகரிப்பவர் கல்லால் தாக்கி படுகொலை

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூரில் மதுகுடிக்கும் போது டம்ளரில் கூடுதலாக மது ஊற்றி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் குப்பை சேகரிப்பவரை கல்லால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குப்பை சேகரிப்பவர் கொலை

திருப்பூர் குமார் நகர் 60 அடி ரோடு பகுதியில் நேற்று காலை 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த தொட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் திருப்பூர் வடக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலையானவர் உதயா (55) என்பதும், இவர் குமார் நகர் பகுதியில் சாலையோரம் தங்கியிருந்து குப்பை மற்றும் காகிதம் சேகரித்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவருடன் சேலத்தை சேர்ந்த தனகோபால் (28) என்பவரும் குப்பை சேகரித்து சாலையோரம் வசித்து வந்தார்.

இதையடுத்து தனகோபாைல பிடித்து போலீசார் விசாரித்தனர்.

மது ஊற்றுவதில் தகராறு

விசாரணையில் நேற்று முன்தினம் இரவு இருவரும் மது குடித்துள்ளனர். அப்போது டம்ளரில் சற்று கூடுதலாக மது ஊற்றுமாறு உதயாவிடம் தனகோபால் கூறியுள்ளார். ஆனால் உதயா மது கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த தனகோபால் கீழே கிடந்த கல்லை எடுத்து உதயாவின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதயா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் பலியானார். இதனால் பயந்துபோன தனகோபால் அங்கிருந்து தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து தனகோபாலை போலீசார் கைது செய்தனர். மது குடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

----


Next Story