வீணாகும் குடிநீர்


வீணாகும் குடிநீர்
x

வீணாகும் குடிநீர்

தஞ்சாவூர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி செல்லும் சாலையோரத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் நீரில் கொசுகள் உற்பத்தியாகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்ப்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

-பொதுமக்கள், தஞ்சை.


Next Story