கழிவுநீர் கால்வாயில் விழுந்த காவலாளி சாவு
கழிவுநீர் கால்வாயில் விழுந்த காவலாளி திடீரென இறந்தார்.
விருதுநகர் ஏ.டி.பி. காம்பவுண்டை சேர்ந்தவர் சிவஞானம் (வயது 37). இவர் இந்நகர் மதுரை ரோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் காவலாளியாக பணியாற்றினார். சம்பவத்தன்று இரவு பணிக்கு சென்ற இவர் காலையில் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி தனலட்சுமி (36). சிவஞானத்தின் செல்போனில் தொடர்பு கொண்ட போது ஒரு போலீஸ்காரர் சிவஞானம் இறந்துவிட்டதாக தனலட்சுமியிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி சிவஞானத்தின் உடல் இருந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்த போது சிவஞானம் காலையில் ஏ.டி.எம். மையத்தின் அருகில் மயங்கி விழுந்ததாகவும், பின்னர் அவர் தானாகவே எழுந்து தந்தி மரத்தெரு வழியாக நடந்துசென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த கழிவுநீர் கால்வாயில் விழுந்து இறந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.