காவலாளி மர்ம சாவு?
காவலாளி மர்ம சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி,
சிவகாசி கிழக்கு பகுதியில் உள்ள பள்ளப்பட்டி முத்துமாரியம்மன் காலனியை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 75). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அச்சகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்த நிலையில் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அச்சகத்தின் வெளியே ஜெயராமன் மயங்கி கிடந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர், ஜெயராமனை பரிசோதித்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகள் தேவி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story