காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு


காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு
x

காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணானது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. சர்ச் எதிரில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வினியோகிக்கப்படும் குடிநீர் குழாய் அதிகாலையில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கழிவுநீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. இதன் காரணமாக முதுகுளத்தூர் டவுன், எட்டிசேரி, கீழ காஞ்சரங் குளம், சித்திரங்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங் களில் காவிரி குடிநீர் துண்டிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கை குடிநீர் பஞ்சத்தை போக்கும் வகையில் கடந்த 2007-ம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.

இதன்காரணமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிய முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடி, அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் துண்டிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் தனியாரிடம் ஒரு குடம் தண்ணீரை 10 ரூபாய்க்கு விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


Next Story