தொருவளூர் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது


தொருவளூர் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது
x

ராமநாதபுரம் அருகே பெருக்கெடுத்து வந்த வைகை தண்ணீர் கரையை உடைத்து தொருவளூர் கிராமத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடைப்பு அடைக்கப்பட்டதால் வீடுகள் தப்பின.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே பெருக்கெடுத்து வந்த வைகை தண்ணீர் கரையை உடைத்து தொருவளூர் கிராமத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடைப்பு அடைக்கப்பட்டதால் வீடுகள் தப்பின.

பருவமழை

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் வைகை அணையில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் 7 அடி கொள்ளளவு உள்ள ராமநாதபுரம் பெரிய கண்மாய் நிறைந்து முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இதனால் கண்மாயின் பாதுகாப்பு கருதி சக்கரக்கோட்டை கண்மாய்க்கும் புல்லங்குடி கண்மாய், களரி கண்மாய் உள்ளிட்டவைகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

கிராமத்துக்குள் புகுந்த தண்ணீர்

இந்தநிலையில் காவனூர் கலுங்கு பகுதியில் இருந்து புல்லங்குடி கண்மாய்க்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று காலை தொருவளூர் அருகே வைகை ஆற்று பகுதியில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்துக்குள் புகுந்துவிட்டது. இந்த தண்ணீர் தொருவளூர் பகுதியில் உள்ள வயல்வெளிகளை சூழ்ந்தது. .

தகவல் அறிந்த ஆர்.டி.ஓ. மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கண்மாய் உடைப்பை தடுத்து ஊருக்குள் தண்ணீர் செல்லாமல் அடைத்தனர்.

இதுகுறித்து தொருவளூர் கிராமத்தினர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு இதேபோல வைகை ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு கண்மாய் தண்ணீர் ஊருக்குள் வந்து வீடுகளை சூழ்ந்து பயிர்களை அழித்தது. அதற்கு நிவாரணம் வழங்கவில்லை.

எனவே உடைப்பை சரி செய்து இனிவரும் காலங்களில் தண்ணீர் ஊருக்குள் வராமல் தடுக்குமாறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இந்த ஆண்டு மீண்டும் ஊருக்குள் தண்ணீர் வந்துவிட்டது.

உடைப்பு சரிசெய்யப்பட்டது

காவனூர் கலுங்கு முதல் புல்லங்குடி வரையிலான வைகை ஆற்று பகுதி கரை இல்லாமல் தரைமட்டமாக உள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இனியாவது சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story