குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி 15-வது வார்டு அங்கேரிபாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானி தண்ணீர் உள்ளிட்ட 2 குடிநீர் குழாய்கள் உடைந்தது. இதனால் 24 மணி நேரமும் குடிநீர் வீணாகி வந்தது. இதையடுத்து 15-வது வார்டு கவுன்சிலர் சாந்தி பாலசுப்பிரமணியம் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர் ஒத்துழைப்புடன் குழாய் உடைப்பை சரி செய்தனர். இதற்காக அங்கேரிபாளையம் பகுதியில் நடுரோட்டில் பெரிய குழி தோண்டப்பட்டு 2 நாட்களாக பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story