புழுக்கள் கலந்து வரும் குடிநீர்


புழுக்கள் கலந்து வரும் குடிநீர்
x
திருப்பூர்


திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதியில் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

குடிநீரில் புழுக்கள்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலம் 38-வது வார்டு ஆண்டிப்பாளையம் கண்ணன் காட்டேஜ் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் 1-வது வீதி, 2-வது வீதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. கொசுத்தொல்லை அதிமாக உள்ளது.

சாக்கடை கால்வாய் வசதி இல்லை. வீடுகளுக்கு முன்பு குழி தோண்டி கழிவுநீரை சேமிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு தேங்கும் நீர் சில நேரங்களில் ரோட்டில் பாய்கிறது. பள்ளிக்குழந்தைகள் அந்த வழியாகவே நடந்து செல்கிறார்கள். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பை தொட்டி போதுமான அளவில் வைக்காமல் வீதிகளில் குப்பைகள் தேங்கிக்கிடக்கிறது.

உரிய நடவடிக்கை

ஏற்கனவே இதுகுபுழுக்கள் கலந்து வரும் குடிநீர்த்து மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இனியும் காலம்கடத்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story