அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை - மாவட்ட ஊராட்சி செயலாளர்
திருவாரூரில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் கூறினார்.
திருவாரூரில் அனைவருக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் கூறினார்.
பயிற்சி கூட்டம்
திருவாரூரில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து வட்டாரங்கள் அளவிலான பயிற்சி கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலாளரும், மாவட்ட திட்டமிடல் அலுவலருமான சந்தானம் தலைமை தாங்கினார். புள்ளியியல் துறை இணை இயக்குனர் திருஞானம், கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர்கள் பக்கிரிசாமி (திருவாரூர்), ரவிச்சந்திரன் (மன்னார்குடி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தானம் கூறியதாவது:-
அனைவருக்கும் குடிநீர்
அனைத்து இடங்களிலும், அனைத்து வகையிலும் ஏழ்மையை ஒழிக்க வேண்டும். உணவு பாதுகாப்புடன், ஊட்டச்சத்து மேம்பாட்டினை அடையவும், நிலையான வளம் குன்றாத வேளாண்மையை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைவருக்கும் குடிநீர், சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்த பயிற்சியை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.