சென்னை அருகே உள்ள ஏரிகளின் நீர்மட்ட அளவு விவரம்


சென்னை அருகே உள்ள ஏரிகளின் நீர்மட்ட அளவு விவரம்
x

கனமழை காரணமாக சென்னை அருகே உள்ள ஏரிகளில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை அருகே உள்ள ஏரிகளில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் 3,231 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட பூண்டி நீர்தேக்கத்தில், இன்று 797 டி.எம்.சி. நீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர்தேக்க அளவு 140 அடி. தற்போதைய அளவு 129.65 அடியாக உள்ளது.

1,081 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில், இன்று 194 டி.எம்.சி. நீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர்தேக்க அளவு 65.50 அடி. தற்போதைய அளவு 194 அடியாக உள்ளது.

3,300 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், இன்று 2,536 டி.எம்.சி. நீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர்தேக்க அளவு 50.20 அடி. தற்போதைய அளவு 46.66 அடியாக உள்ளது.

3,645 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில், இன்று 2,675 டி.எம்.சி. நீர் உள்ளது. இதன் அதிகபட்ச நீர்தேக்க அளவு 85.40 அடி. தற்போதைய அளவு 81.69 அடியாக உள்ளது.

500 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story