நீர் நிலை ஆக்கிரமிப்பு; தாசில்தார் ஆய்வு


நீர் நிலை ஆக்கிரமிப்பு; தாசில்தார் ஆய்வு
x

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் முல்லா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 66 கடைகள் வீடுகள் மற்றும் ஆலடி ரோட்டில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுவது தொடர்பாக தாசில்தார் தனபதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் பழனிவேல், கிராம நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்களிடம், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தாசில்தார் தனபதி எச்சரிக்கை விடுத்தார். பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Next Story