28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு


28 ஏரிகளுக்கு   தண்ணீர் திறப்பு
x

பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து ெகாண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.

விவசாயிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை இடதுபுற கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து கால்வாய் மூலம் சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி நீர்மட்டம் 50 அடியை கடந்துள்ளது.

மேலும், அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக பாளேகுளி ஏரிக்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி கே.ஆர்.பி. அணை இடதுபுறகால்வாய் நீட்டிப்பு பாளேகுளி முதல் சந்தூர் பயன்பெறுவோர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

இதைத் தொடர்ந்து பாளேகுளி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு பாளேகுளி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அணை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, பாசன உதவி பொறியாளர் சையத் ஜஹ்ருதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஏரியில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார்.

இது தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்கள் கூறுகையில், பாளேகுளி ஏரியில் இருந்து சந்தூர் ஏரி வரை 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது அரசமரத்து ஏரியில் இருந்து ஒவ்வொரு ஏரியாக தண்ணீர் நிரப்பப்படும். முன்னதாக, கால்வாய்கள் தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்று கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் தேங்காய் சுப்பிரமணி, சாந்தமூர்த்தி மற்றும் பயன் பெறுவோர் சங்கத்தின் தலைவர் சிவகுரு, நிர்வாகிகள் இளங்கோவன், பழனி, சின்னசாமி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story