காரிமங்கலத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்தது


காரிமங்கலத்தில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்தது
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காரிமங்கலம் நெடுஞ்சாலை ஓரமாக செல்லும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story