கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் மகளிர்- குழந்தைகள் நல பிரிவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. அமைத்து கொடுத்துள்ளார். இவற்றின் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலஹாசன், டாக்டர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story