நெல்லை வக்கீல் சங்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி திறப்பு
நெல்லை வக்கீல் சங்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி திறக்கப்பட்டது.
திருநெல்வேலி
நெல்லை கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் மூத்த வக்கீல் கணபதி நினைவாக அவரது குடும்பத்தினர் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை அமைத்து கொடுத்து உள்ளனர். இதன் திறப்பு விழா நடைபெற்றது. நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார்.
இதில் நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு கருவியை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு துணைத்தலைவர் வேல் கார்த்திகேயன், கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிசில்லா பாண்டியன், பிரபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில் சங்க பொருளாளர் நெல்சன் ஜெபராஜ், துணைத்தலைவர் சீதா குத்தாலிங்கம், உதவி செயலாளர் பரமசிவன், நூலகர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story