நல்லாற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு


நல்லாற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு
x

நல்லாற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறப்பு

திருப்பூர்

தளி

காண்டூர் கால்வாயில் இருந்து நல்லாற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நல்லாறு

மேற்குதொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகும் நல்லாறு அடிவாரப் பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயை கடந்து பாலாற்றில் இணைகிறது. அதைத்தொடர்ந்து பாலாற்றுடன் பயணத்தை தொடங்கும் நல்லாறு இறுதியில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள ஆழியாற்றுடன் கலக்கிறது.

இந்த நெடுந்தூர பயணத்தில் சுற்றுப்புற கிராமங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்தும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நீர்இருப்பை உயர்த்தும் பணியையும் செய்கிறது. இதனால் பாசனத்திற்காக விவசாயிகளும், குடிநீருக்காக பொதுமக்களும் நல்லாற்றை நம்பி உள்ளனர்.

தண்ணீர் திறப்பு

தற்போது கோடை வெப்பத்தின் தாக்குதலால் நல்லாறு வறண்டு போனது. இதன் காரணமாக கிணறு ஆழ்குழாய் கிணறுகள் நீர்இருப்பை இழந்ததுடன் குடிநீர் திட்டங்களும் முடங்கிப் போனது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் அவதிக்கு உள்ளானார்கள். அதைத் தொடர்ந்து நல்லாற்றில் தண்ணீர் திறந்து விடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதன் பேரில் நேற்று முதல் 6 நாட்களுக்கு காண்டூர் கால்வாயில் இருந்து நல்லாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.இதனால் நல்லாற்றை நீராதாரமாகக் கொண்ட கிணறு, ஆழ்குழாய் கிணறுகள் நீர்இருப்பை பெறுவதுடன் குடிநீர் திட்டங்களும் புத்துயிர் பெறுவதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளது.இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

----------


Next Story