நீர்வளத்துறை ஆதார செயற்பொறியாளர் ஆய்வு


நீர்வளத்துறை ஆதார செயற்பொறியாளர் ஆய்வு
x

நீர்வளத்துறை ஆதார செயற்பொறியாளர் ஆய்வு

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி

மேட்டூர் அணைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து உபரி நீர் வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கல்லணையில்‌ தஞ்சை நீர்வள ஆதார துறை செயற்பொறியாளர் இளங்கோ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீர் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் கொள்ளிடத்தில் மணற்போக்கி மற்றும் இதர மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறுவதை பார்வையிட்டார். பருவமழை காலங்களிலும் கல்லணைக்கு அதிக தண்ணீர் வரும் நேரங்களில் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று கல்லணையில் பணியாற்றுபவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது தவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை உதவி பொறியாளர் திருமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story