'வாட்டர் சர்வீஸ்' கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை


வாட்டர் சர்வீஸ் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x

அடகு வைத்த நகை ஏலம் சென்றதால் வாகனங்களை ‘வாட்டர் சர்வீஸ்’ செய்யும் கடை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

'வாட்டர் சர்வீஸ்' கடை

குளித்தலை காவல்கார தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 50). இவர் குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை சாலையில் வாகனங்களை 'வாட்டர் சர்வீஸ்' செய்யும் கடையை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் 15 பவுன் நகையை அடகு வைத்து கடன் பெற்றுள்ளார்.

அதை திருப்பி கட்டாத காரணத்தினால் நகை ஏலத்திற்கு சென்றுள்ளது. அதுபோல் காசோலை வழக்கு ஒன்று கோர்ட்டில் விசாரணையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கோவிந்தராஜ் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து நேற்று காலை வாட்டர் சர்வீஸ் கடையை ஊழியர்கள் திறந்து பார்த்தபோது கோவிந்தராஜ் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோவிந்தராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story