தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்


தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்
x

தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நாகப்பட்டினம்


தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

நாகையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் அகண்ட ராவ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருள் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பேசியதாவது:-

ஓய்வூதியம் வழங்க வேண்டும்

கமல்ராம்:- கஜாபுயலால் பாதிக்கப்பட்ட வணிக நிறுவனங்களுக்கு காலதாமதம் இன்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும்.

சரபோஜி:- நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு கணக்கெடுப்பை ஊராட்சி வாரியாக எடுப்பதை கைவிட வேண்டும். தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும்.

ராமதாஸ்:- 2021-22-ம் ஆண்டு உளுந்து பயிருக்கு காப்பீட்டு தொகை வழங்குவதில் இன்சூரன்ஸ் நிறுவனம் பாரபட்சத்துடன் செயல்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் தொகை வழங்கவில்லை

கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் பச்சை பயிறு அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு மழையால் சேதம் அடைந்தது. இந்த பயிருக்கு இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படவில்லை.தாளடி பயிர்களுக்கு தேவையான தண்ணீரை வருகிற 15-ந்தேதி வரை திறக்க வேண்டும்.

முஜீபுஷரீக்:- 4 கிராம விவசாயிகளின் நலன் கருதி 100 எக்டேர் சாகுபடி நிலத்திற்கு தண்ணீர் கிடைக்க ஏதுவாக இடையன்புலம் மதகு பாலத்தில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூட்டி கிடக்கிறது

காளிமுத்து:- சிக்கல் வேளாண் விதை சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு முழு பணிகளும் முடிந்துள்ள நிலையில், விதை சுத்திகரிப்பு எந்திரம் மட்டும் வராமல் உள்ளது. அதேபோல் முழுநேரம் இயங்கி வந்த செம்பியன்மகாதேவி வேளாண் விரிவாக்க மைய கட்டிடம் கடந்த சில மாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story