குண்டலப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை


குண்டலப்பட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமிபூஜை
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் செம்மாண்ட குப்பம் ஊராட்சி குண்டலப்பட்டி கிராமத்தில் 14-வது நிதி குழு மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மற்றும் ரூ.12 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பானு பூமணி தலைமை தாங்கி, பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் துரை, ரவி, முன்னாள் ராணுவ வீரர் மாதையன், ஊராட்சி செயலாளர் இடும்பன், வார்டு உறுப்பினர்கள் கீதாமுத்து, பச்சியப்பன், பேபிகாசிநாதன், சதீஷ்குமார் பழனியம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story