வனவிலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைப்பு
குடியாத்தம் அருகே காப்புக்காட்டில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.
வேலூர்
குடியாத்தம்
குடியாத்தம் வனச்சரகம் கல்லப்பாடி முதலியார்ஏரி பகுதியில் சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன இந்த வனவிலங்குகள் தண்ணீருக்காக வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது.
இதனால் மான்கள் உள்ளிட்டவை நாய்களால் கடித்தும் இறக்க நேரிடுகிறது.
இதையடுத்து முதலியார் ஏரி வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க வனத்துறை சார்பில் குடிநீர் தேக்கி வைக்கும் வகையில் தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
கோடைகாலத்தை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் தாகம் தீர்க்க புதிதாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் இன்று வனத்துறை சார்பில் தண்ணீர் நிரப்பப்பட்டது.
Related Tags :
Next Story