பக்தர்களுக்கு நீர் மோர்
ஆறுமுகநேரி சாகுபுரத்தில் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு சாகுபுரம் டி.சி.டபிள்யூ. தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பு தொழிற்சாலையின் சார்பில் மருத்துவ பரிசோதனை, மாத்திரை மருந்துகள் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு நீர் மோர், பானகாரம் ஆகியவற்றை தொழிற்சாலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஸ்ரீனிவாசன், அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் மகராஜன் மற்றும் சாகுபுரம் தொழிற்சாலை பொது ஜன தொடர்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல் சாகுபுரம் உப்பள நுழைவு வாயிலில் தூத்துக்குடி கண்ணா சில்க் நிறுவனத்தின் சார்பில் பக்தர்களுக்கு நீர்மோர், பானகாரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story