குழாய் உடைந்து வீணாகிய குடிநீர்
திருப்பூர்
திருப்பூர் போயம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் நெட்வொர்க் நிறுவனம் சார்பில் கேபிள் அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன்நகர் பகுதியில் கேபிள் அமைக்கும் பணிக்காக பொக்லைன் மூலமாக சாலையோரம் தோண்டியபோது அங்கிருந்த குடிநீர் குழாய் உடைந்தது. இதையடுத்து அங்கு தண்ணீர் நீரூற்று போல் பெருக்கெடுத்து ஓடியது. உடனடியாக குழாய் உடைப்பை சரிசெய்ய முடியவில்லை. இதனால் அந்த பகுதியில் பலமணி நேரம் குடிநீர் வீணாகியதுடன், சாலையோரம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் கடும் அதிருப்திக்குள்ளாகினார்கள்.
Next Story