கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு


கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு
x

கோவில்களில் வளர்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

கரூர்

தோட்டக்குறிச்சி சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற சொர்ண பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வளர்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதேபோல மண்மங்கலம், நஞ்சை புகழூர், காகிதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் பைரவருக்கும் வளர்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story