நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் வருகிற நாடாளுமன்ற தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீசபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சின்னான், நிர்வாகிகள் ரஜிமா, ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சி பணிகள் மற்றும் தேர்தல் பணியை தீவிர படுத்துவது குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும், அனைத்து கிராமங்களிலும் கட்சியின் கிளைகளை உருவாக்கி கட்சியை பலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 முகவர்களை நியமனம் செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. .கூட்டத்தில் மாவட்ட தலைவர் மாரியப்பன், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சுரேஷ், நிர்வாகிகள் காசி, மன்னன், மணிவண்ணன் மற்றும் தொகுதி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.