திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வெளியிட உள்ளோம் - அண்ணாமலை பேட்டி
திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திமுக அரசின் இரண்டு துறைகளின் ஊழல் ஆதாரங்களை வரும் 3 அல்லது 4ஆம் தேதி வெளியிட உள்ளோம். ஊழல் பட்டியல் வெளியிடுவதன் மூலம் திமுக தலைமையிலான அரசு திருந்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சியைக் கவிழ்ப்பது எங்கள் நோக்கம் கிடையாது.
அமைச்சர் பொன்முடிக்கு புதிய கல்விக் கொள்கை குறித்த புரிதல் இல்லை; புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் முழுவதும் படிக்கவில்லை என்றார்.
Related Tags :
Next Story