எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் ஓபிஎஸ் உடன் உள்ளோம் - தேனி மாவட்ட செயலாளர் சையது கான்
எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் ஓபிஎஸ் உடன் உள்ளோம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதேவேளை, தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையது கான், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் செப். 28 வரை உள்ளது, அதை யாரும் மாற்ற முடியாது. மேலும், எந்த லாபத்தையும் எதிர்பார்க்காமல் ஓபிஎஸ் உடன் உள்ளோம், எப்போதும் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.