தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை என கனிமொழி எம்.பி. கூறினார்.
சாத்தூர்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்துவோம் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை என கனிமொழி எம்.பி. கூறினார்.
காங்கிரஸ் வெற்றி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான். நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. அ.தி.மு.க.வினர் தற்போது பல திசைகளில் பிரிந்து இருக்கின்றனர். ஆனாலும் அதில் நிறைய பேர் ஆதாயம் தேட வேண்டும் என நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.
மது விலக்கு
நிச்சயமாக அ.தி.மு.க.வில் எல்லோரும் இடைத்தேர்தலில் இணைந்து வேலை செய்தாலும், வேலை செய்யாவிட்டாலும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.
தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வருவோம் என நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. படிப்படியாக மதுக்கடைகள் குறைக்கப்படும் என்பது தான் தி.மு.க.வின் வாக்குறுதி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.