மின்மோட்டார் பழுதால் 3 மாதமாக குடிநீரின்றி தவிக்கிறோம்


மின்மோட்டார் பழுதால் 3 மாதமாக குடிநீரின்றி தவிக்கிறோம்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே மின்மோட்டார் பழுதால் 3 மாதமாக குடிநீரின்றி தவிக்கிறோம் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் தொிவித்தனா்.

கடலூர்

பண்ருட்டி:

பண்ருட்டி அருகே நடுக்குப்பம் ஊராட்சி சொரத்தங்குழி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பா.ம.க. வடக்கு மாவட்ட செயலாளர் என்ஜினீயர் ரவிச்சந்திரன், வார்டு கவுன்சிலர் ராஜா மற்றும் நிர்வாகிகளுடன் நேற்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

பண்ருட்டி ஒன்றியம் நடுக்குப்பம் ஊராட்சி 9-வது வார்டு ஏரிக்கரை பகுதியில் குடிநீர் பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு மின் மோட்டார் திடீரென பழுதானது. அதனை உடனடியாக சீரமைக்கவில்லை. இதனால் ஆழ்துளை கிணறும் தூர்ந்து விட்டது.

இதனால் அப்பகுதி மக்கள், குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இது பற்றி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது. அப்போது புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். ஆனால் அதற்கான எவ்வித முயற்சியும் இல்லை. இதனால் நாளுக்கு நாள் குடிநீர் பிரச்சினை எங்கள் பகுதியில் அதிகரித்து வருகிறது. தற்போது பெயரளவுக்கு அருகில் உள்ள மோட்டார் மூலம் குறைந்த அளவு தண்ணீர் வழங்கி வருகின்றனர். இது போதுமானதாக இல்லை. ஆகவே குடிநீர் பிரச்சினையை தவிர்க்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story