வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்


வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்
x

வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்

மயிலாடுதுறை

மத்திய அரசின் வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம் என அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.

வரவேற்பு

நாகையில் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து ெரயில் மூலம் மயிலாடுதுறைக்கு வந்த அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா, தலைவர் அசோக் தாவ்லே, துணை செயலாளர் விஜூ கிருஷ்ணன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டில்லிபாபு ஆகியோருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மயிலாடுதுறை மாவட்டக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பேட்டி

முன்னதாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு டிசம்பர் மாதம் கேரளாவில் நடைபெறுகிறது. இதனையொட்டி ஒவ்வொரு மாநிலமாக விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் 30-வது விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடைபெறுகிறது.

தொடர் போராட்டம்

8 ஆண்டுகள் பிரதமர் மோடியின் ஆட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் கடன் சுமை மற்றும் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இணைந்து 750 உயிர்களை பலி கொடுத்து வேளாண் திருத்த சட்டங்களை தடுத்து நிறுத்தி உள்ளோம். மத்திய அரசின் வேளாண் விரோத செயல்களை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story