மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈடிக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
எத்தனை மோடி, அமித்ஷா வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ என தான் பாஜவின் தொண்டர் படை. செந்தில் பாலாஜியை 18 மணி நேரம் சோதனை என்ற பெயரில் கொடுமைபடுத்தி உள்ளனர். 2019, 2021 தேர்தல்களை போல 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டியடிக்க வேண்டும். மோடிக்கும் பயப்பட மாட்டோம் ஈடிக்கும் ( அமலாக்கத்துறை) பயப்பட மாட்டோம். முதல்-அமைச்சர் நடத்திய போராட்டத்தால், ஜல்லிக்கட்டுத் தடை நீக்கப்பட்டது. தமிழகத்தில் தொகுதிக்கு ஒரு ஜல்லிக்கட்டு திடல் அமைக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story