8 மணிநேர வேலை உரிமையை பாதுகாப்போம்


8 மணிநேர வேலை உரிமையை பாதுகாப்போம்
x

8 மணிநேர வேலை உரிமையை பாதுகாப்போம் மே தின விழாவில் ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டத்தில் உறுதி ஏற்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தஞ்சை கோட்ட அலுவலகம், ஜெபமாலைபுரம் நகர கிளை, தஞ்சை கீழவாசல், சத்யா நகர், கட்டுமான சங்க கிளைகள், டாஸ்மாக் மாவட்ட அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்று விழா நேற்று நடந்தது. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி. தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரகுமார்,ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, துணைத் தலைவர் சுந்தரபாண்டியன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துகுமரன், அரசு போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், நிர்வாக குழு உறுப்பினர் கஸ்தூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத சட்டங்களையும், நடவடிக்கைகளையும், கொள்கைகளையும் எதிர்த்து உறுதியுடன் போராடுவது, 8 மணிநேர வேலை உள்ளிட்ட உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி ஏற்கப்பட்டது.


Next Story